உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் ஜெ., குணமடைய வேண்டி அ.தி.மு.க., சிறப்பு ேஹாமம்

முதல்வர் ஜெ., குணமடைய வேண்டி அ.தி.மு.க., சிறப்பு ேஹாமம்

உளுந்துார்பேட்டை: முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி, குமரகுரு எம்.எல்.ஏ., அங்க பிரதட்சணம் செய்தார்.

திருநாவலுார் ஒன்றி யம், பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., அங்க பிரதட்சணம் செய்தார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

இதேபோல் திருநாவலுார் ஸ்ரீபக்தஜனேஸ்வரர் கோவிலில் முதல்வர் பூரண நலம் பெற வேண்டு, ஆயுள் ேஹாமம், பாதுார் ஸ்ரீபிரத்தியங்கராதேவி கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது. சட்டத்துறை அமைச்சர் சண்முகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, பொருளாளர் சந்திரசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் விநாயகமூர்த்தி, மாணவரணி தலைவர் சீனிவாசன், ஒன்றிய சேர்மன் மகாலட்சுமிஏகாம்பரம், கல்வி குழு தலைவர் ஏகாம்பரம், ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், மணிராஜ், பழனி, ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !