நாட்டாற்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3305 days ago
மொடக்குறிச்சி: தமிழக முதல்வர் நலம்பெற வேண்டி, நாட்டாற்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். மொடக்குறிச்சி, அ.தி.மு.க.,வினர் நேற்று காலை காங்கயம்பாளையம் நாட்டாற்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, முதல்வர் விரைவில் உடல் நலம்பெற வேண்டும் என்று வழிபட்டனர். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் சின்னுசாமி, கொடுமுடி ஒன்றிய செயலாளர் கலைமணி, அரச்சலூர், அவல்பூந்துறை பேரூர் செயலர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.