வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 14 பழங்கால சிலைகள் பறிமுதல்
ADDED :3364 days ago
சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த, 14 பழங்கால சிலைகளை, டி.ஆர்.ஐ., என்ற, வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையை சேர்ந்த பாலாஜி, ஓம்காரம் என்பவர்களின் வீடுகளில், டி.ஆர்.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது, விலை மதிக்க முடியாத, 14 பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுஇருந்ததை கண்டுபிடித்தனர். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த அந்த சிலைகளை பறிமுதல் செய்ததுடன், பாலாஜி மற்றும் ஓம்காரத்தையும் கைது செய்தனர். இருவரும், ஜூன் மாதம் கைதான, பிரபல சிலை கடத்தல்காரன் தீனதயாளன் மற்றும் டில்லியை சேர்ந்த உதித் ஜெயினுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த தரகர் உதித் ஜெயின், மும்பையில் கைது செய்யப்பட்டான்.