உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்காம கந்தன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கதிர்காம கந்தன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உளுந்தை: உளுந்தை கிராமத்தில் உள்ள கண்டி கதிர்காம கந்தன் கோவிலில் நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் உள்ளது கண்டி கதிர்காம கந்தன் கோவில். இந்த கோவிலில், விநாயகர், ஈஸ்வரர், பெருமாள், கதிர் காம கந்தன், அய்யப்பன், கருமேரி அம்மன் மற்றும் கங்கையம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கான மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, கடந்த, 12ம் தேதி காலை, கிராம தேவதை வழிபாடும், தொடர்ந்து, பிள்ளையாருக்கு வேள்வியும் நடந்தது. பின் அன்றிரவு, முத்தமிழால் முருகவேலுக்கு முதல் கால வேள்வி நடந்தது. பின், நேற்று முன்தினம் காலை, திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால வேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை, நான்காம் கால வேள்வியும், அதை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு, கலச புறப்பாடும் நடந்தது. பின், கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், ஈஸ்வரர், பெருமாள், அய்யப்பன், கருமாரி அம்மன், கதிர்காம கந்தன் மற்றும் கங்கையம்மன் கோவில்களில் உள்ள கோபுர கலசங்களுக்கு, காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை சார்பாக, தமிழ் முறைப்படி புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், காலை, 11:00 மணிக்கு, கதிர்காம கந்தனுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடும், மாலையில் திருமுருகன் திருக்கல்யாணமும் நடந்தது. அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் உற்சவர் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு, காலை, 10:00 மணி முதல், 2:00 மணி வரை மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !