விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காணிக்கை ரூ.10 லட்சம்
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டில்களை திறந்து எண்ணியதில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 256 ரூபாய் காணிக்கை கிடைத்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 9 பொது உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்தது. அதில், ஆய்வாளர் சுபத்ரா, செயலர் அலுவலர் கருணாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு, அபிராமி ஐ.டி.ஐ., மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதன் மூலம், திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 782 ரூபாயும், பொது உண்டியல்கள் மூலம் 8 லட்சத்து 60 ஆயிரத்து 474 ரூபாய் என மொத்தம் 10 லட்சத்து 8 ஆயிரத்து 256 ரூபாயும்; வெள்ளி 60 கிராம், தங்கம் 2 கிராம் 900 மில்லி கிராம் காணிக்கையாக கிடைத்தது. கடந்த அகஸ்ட் மாதம் 24ம் தேதி உண்டியல் திறந்து எண்ணியபோது, 8 லட்சத்து 36 ஆயிரத்து 170 ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.