கார்த்திகை மாத பிறப்பு பழநியில் மாலை அணிவிப்பு
ADDED :3282 days ago
பழநி : கார்த்திகை மாதபிறப்பை முன்னிட்டு பழநி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்தனர். கார்த்திகை முதல்நாளை முன்னிட்டு பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், யாகபூஜையும், வெள்ளிக்கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. பாதவிநாயகர்கோயில், திருஆவினன்குடிகோயில், கிரிவீதி ஐயப்பன் கோயில்களில் குருசுவாமி மூலம் பக்தர்கள் அதிகாலையில் மாலையணிந்தனர். ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு செல்லும் லட்சகணக்கான பக்தர்களுக்காக காதி வஸ்ரலாயம், ஜவுளி கடைகளிலும், புளு, கறுப்பு நிறக்காவி ஆடைகள், துளசிமணிமாலை, பாசிமணிகள், இருமுடி பைகள் விற்பனைக்கு வந்துள்ளது.