தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் கூடுதல் கட்டணம் வசூலிப்பால் பக்தர்கள் அவதி
ADDED :3328 days ago
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, இந்த கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஓம்சக்தி பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பஸ், கார், சுற்றுலா வேன்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக கட்டாய வசூல் செய்யப்படுகிறது. மேலும், மலை அடிவாரத்திலுள்ள உள்ள கழிப்பறையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.