உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதர், வைத்தியநாதசாமி கோயிலில் சங்காபிஷேகம்

சொக்கநாதர், வைத்தியநாதசாமி கோயிலில் சங்காபிஷேகம்

விருதுநகர் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசாமி திருக்கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. ரகு பட்டர் தலைமையில் வைத்தியநாதருக்கு ஜெபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ,தீபராதனைகள் நடத்தப்பட்டன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலா எழுந்தருளினர்.ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !