உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரக்க சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை

கோரக்க சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை

மங்கலம்பேட்டை: மு.பரூர் கோரக்க சித்தர் ஜீவசமாதியில் நடந்த குருபூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த அன்னபூரணி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நேற்று குருபூஜை  விழா நடந்தது.  இதையொட்டி காலை 7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை, காலை 10:00 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. பகல் 12:00  மணிக்கு நடந்த குருபூஜையில் கோரக்க சித்தர் ஜீவ சமாதிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு  அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !