ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
ADDED :3278 days ago
விருதுநகர், விருதுநகர் ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவஙகியது. விழாவின்போது சுவாமி, சேஷம், ஹம்சம், பல்லக்கு, கல்ப விருட்சம், யானை, கருடன், சூரிய பிரபை, குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் வீதி உலா நடக்க உள்ளது. டிசம்பர் 4ல் தாயார், பெருமாளுக்கு திருமஞ்சனம், திருவாரதணம் நடக்கிறது.