உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஏகாதசி திருமஞ்சனம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஏகாதசி திருமஞ்சனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, நேற்று திருமஞ்சனம் நடந்தது.திருவள்ளூரில், பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, ஏகாதசியை முன்னிட்டு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, தாயாருக்கும் திருமஞ்சனம் நடந்தது. மாலை, அழகிய சிங்கர் மாடவீதி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிய சிங்கருடன் உள் புறப்பாடு வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !