உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை மகா தீபத்திற்கு 3,500 கிலோ ஆவின் நெய்

தி.மலை மகா தீபத்திற்கு 3,500 கிலோ ஆவின் நெய்

வேலுார்: "திருவண்ணாமலை மகா தீபத்திற்கு, ஆவின் நிறுவனத்தில் இருந்து, 3,500 கிலோ நெய் வழங்கப்பட உள்ளது, என, வேலுார் ஆவின் நிறுவனத்தின் தலைவர் வேலழகன் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 12ம் தேதி, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக, வேலுார் ஆவின் நிறுவனத்தில் இருந்து, ஒரு கிலோ, 410 ரூபாய் வீதம், 3,500 கிலோ நெய் வினியோகம் செய்யப்படுகிறது. தலா, 15 கிலோ எடையுள்ள, 234 டின்களில் நெய் அடைக்கப்பட்டு, நாளை அண்ணாமலையார் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்தாம்நாளில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்ற ராட்சதகொப்பரை புதிதாக சுமார் 200 கிலோ செப்பு தகுடுகளால் செய்யப்பட்டு பணி முடிந்து  நேற்று அருணாச்சலேஸ்வரர் கோவில்  ராஜகோபுரம் முன் சிறப்பு பூஜை செய்து மாட வீதி உலா வந்து ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !