உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார், வீரன் கோவில் கும்பாபிஷேகம்

அய்யனார், வீரன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வி.சாத்தனுார் சாலையில் உள்ள அய்யனார் சுவாமி ,வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

விக்கிரவாண்டி டோல் கேட் அருகில் வி.சாத்த னுார் சாலையில் ஸ்ரீபூரணி, புஷ்கலா சமேத அய்யனார் சுவாமி, வீரன் கோவில் கிராம குல தெய்வ வழிபாட்டுகாரர்களாலும், பொதுமக்களாலும் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகத்தினையொட்டி,  நேற்று காலை 9.15  மணிக்கு இரண்டாம் கால யாகசாலை  பூஜை முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்று 10.15 மணிக்கு ஸ்ரீபூரணி, புஷ்கலா சமேத அய்யனார் சுவாமி, வீரன் சுவாமி சிலைகளுக்கு விக்கிரவாண்டி சந்திரசேகர குருக் கள் புனித நீர் ஊற்றினார். கடலுார் சண்முக சுந்தரம் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடந்தது. விழாவை ஸ்பதி சுப்பிரமணியன்,  தாய் ேஹாட் டல் ராஜேஷ், பவானி ராஜேஷ், தர்மகர்த்தா பட்டாணி ராஜேந்திரன், மணி, கோவிந்தசாமி, கணேஷ் குமார், அ.தி.மு.க.,நகர செயலாளர் பூர்ணராவ், நாட்டாண்மை பலராமன், ஜெயக்கொடி ஏழுமலை, பொன்வேல், கருணாநிதி, குப்புசாமி ஆகியோர் முன்னின்று நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !