உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் விழா

ஆதிபராசக்தி பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கடலுார் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியும் பரங்கிப்பேட்டை அடுத்த குமாரப்பேட்டை கிராமத்தில் ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கி கலச விளக்கு வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் முருகு வெங்கட்ராமன், பொருளாளர் ஜெயபால், முன்னாள் ஊராட்சி தலைவி கஸ்துாரி ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் பாலகுமார் வரவேற்றார். ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவித்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட நாயகர் பங்காரு அடிகளாரின் சகோதரர் காளிதாஸ் வழங்கினார்.  மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், சுப்ரமணியன், பார்த்தசாரதி, பழனிவேல், சங்கர், கிராம தலைவர் வைத்தியநாதன், மகளிரணி தலைவி சீத்தாலட்சுமி, ஜெய்சங்கர், அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் அர்ச்சுனன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !