மேட்டுப்பெருமாள்நகர் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3254 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப்பெருமாள்நகர் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேம் நடந்தது. இரண்டாம் காலயாகபூஜையில் மகாபூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம்புறப்பாடாகி புண்ணியதிருத்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் ஊற்றிகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனைகள் நடந்தது. யாகசாலை பூஜை கும்பாபிஷேகத்தை பரமேஸ்வரபட்டர் தலைமையில் வேதவிற்பனர்கள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.