உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு கோவில்களில் கார்த்திகை தீப விழா

கிணத்துக்கடவு கோவில்களில் கார்த்திகை தீப விழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு கோவில்களில், கார்த்திகை தீபத்தை ஒட்டி தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்றுமுன்தினம் கார்த்திகை தீபத்தை ஒட்டி மாலை, 6:30 மணியளவில் கோவில் முன்புறம் வாழை மரத்தின் மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, காற்று அதிகமாக வீசிவந்ததால், பக்தர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த விளக்கை ஏற்றி, கோவில் உள்ளே வைத்து வழிபட்டனர். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, வேலாயுதசாமிக்கு மாலை, 6.00 மணியளவில் சிறப்பு அபிசேக பூஜையும், ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரிவெற்றிவேல் கோபண்ண மன்றாடியார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், வேலாயுதசாமி உற்சவர் மலை மேல் வலம் வந்தார். கோவில் முன்பு வைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் கந்தசாமி, பரம்பரை அறங்காவலர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !