வெண்ணைமலை கோவில் 42வது ஆண்டு படிபூஜை
ADDED :3317 days ago
வெண்ணைய்மலை: கரூர் அடுத்த வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், 42வது ஆண்டாக படித்திருவிழா நடந்தது, அன்று காலை, 8:00 மணிக்கு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபி?ஷகம், 9:00 மணிக்கு மேல் சுவாமி கிரிவலம் வருதல், படி பூஜை ஆகியன நடந்தது. அரங்கநாதன் பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரபிரம்மானந்த பஜனை கோஷ்டியினர் சார்பில், பஜனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கிருத்திகை அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.