திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்
 திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மார்கழியை முன்னிட்டு நாளை(டிச.16) முதல் ஜன. 13 வரை நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12:00 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படும். டிச. 16 முதல் டிச. 20வரை எண்ணெய் காப்பு உற்சவம். ஜன. 2ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், ஜன. 8ல் சொர்க்க வாசல் திறப்பு, ஜன. 11ல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10:30 மணிக்கு நடை சாத்தப்படும், மீண்டும் மாலை 5 :00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8:00 மணிக்கு நடை சாத்தப்படும். மார்கழி மாதம் முழுவதும் காலை 5:30 மணிக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படும். தேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு தினம் சிறப்பு பூஜைகள் நடக்கும்.