சின்னாக்கண்டனூரில் தீ மிதி திருவிழா
ADDED :3260 days ago
கொடுமுடி: கொடுமுடி அருகே, சின்னாக்கண்டனூரில், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 11ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மூன்றாம் நாளான நேற்று காலை, 9:00 மணியளவில், குண்டம் பற்ற வைக்கப்பட்டு, மாலை, 5:00 மணியளவில் தீ மிதி திருவிழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சக்தி மாரியம்மன் சுவாமி திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவடைந்தது. அதேபோல், கொடுமுடி அருகே உள்ள, ஏமகண்டனூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது.