உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா துவக்கம்

மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா துவங்கியது. மேல்மருவத்துார் சித்தர்பீடத்திற்கு பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு, தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதை முன்னிட்டு, சித்தர் பீடத்தில், அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகேம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சக்தி மாலை விழாவை, ஆதிபராக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கிவைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர், செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சக்தி மாலை அணிந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பங்காரு அடிகள் ஆசி வழங்குவார். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக, 42 சிறப்பு ரயில்களை, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !