உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லைப்பிடாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.3.08 லட்சம் வசூல்

எல்லைப்பிடாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.3.08 லட்சம் வசூல்

சேலம்: சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. இதில், 3.08 லட்ச ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலின் உப கோவிலான, செரிரோட்டில் அமைந்துள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், மூன்று நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை மூன்றும், கோவில் உதவி ஆணையர் அங்கம்மாள் முன்னிலையில் திறக்கப்பட்டன. மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 129 பழைய, 500 ரூபாய் நோட்டுகள், 21 1,000 ரூபாய் நோட்டுகள், 21 உள்பட, மூன்று லட்சத்து, 8,751 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !