உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக மகா சுவாமி மண்டல பூஜை

நாக மகா சுவாமி மண்டல பூஜை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், காவிரி கரையோரம் அமைந்துள்ள, நாக மகா சுவாமிக்கு, மண்டல பூஜை நடந்தது. பள்ளிபாளையம் அடுத்த, வசந்தநகரில் காவிரி ஆற்றோரம், 400 ஆண்டுகளுக்கு முன், நாக மகா சுவாமி என்பவர், ஜீவ சமாதி அடைந்தார். இந்த இடத்தில், அவரின் சிலையை வடிவமைத்து, கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, நாள்தோறும் பூஜை, வழிபாடு நடந்து வந்தது. நேற்று மண்டல பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, நாக மகா சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !