உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊரின் பெயரில் ஸ்ரீ வந்தது ஏன்?

ஊரின் பெயரில் ஸ்ரீ வந்தது ஏன்?

ஆண்டாள் அவதரித்த ஊர்  ஸ்ரீவில்லிபுத்தூர்... பெயரிலேயே ஒரு அழகு. ஆரம்பிக்கும் போதே ஸ்ரீ என அழகாகத் துவங்குகிறது. ஸ்ரீ என்றால்  செல்வம். இங்கு வந்தால் செல்வம் கிடைக்குமா! நிச்சயமாய்க் கிடைக்கும். ஏனெனில், இங்குள்ள திருமாலான வடபத்ரசாயி என்ற பெயரிலேயே  அனைத்தும் அடங்கிக் கிடக்கிறது. இதை வடபத்ரம்+சாயி என பிரிப்பர். சாயி என்றால் தந்தை அல்லது தலைவன். வடபத்ரம் என்றால் ஆலிலை.  ஆலிலையில் உறங்குபவன் என்ற பொருள் ஒரு பக்கம் இருக்கிறது. இதுதவிர, இம்மையில் பொருளும், மறுமையில் மோட்சமும் தருபவன் என்ற பொருளும் இந்தப்பெயருக்கு உண்டு. இந்த பூவுலகில் வாழ பொருள் வேண்டும். மோட்சம் செல்ல நிம்மதியுடன் அவரை எண்ணும் மனம் ÷ வண்டும். இந்த இரண்டு செல்வமும் தருபவர் வசிக்கும் இடம் என்பதால், அவர் குடியிருக்கும் ஊரின் பெயரில் ஸ்ரீ அமைந்தது. அவர்  ஆண்டாளைக் கைப்பிடித்த ஸ்ரீரங்கத்தின் பெயரிலும், ஸ்ரீ உள்ளது. எவ்வளவு பெரிய ஒற்றுமை !


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !