ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அஷ்டமி பூப்பிரதஷணம்
ADDED :3254 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அஷ்டமி பூப்பிரதஷணத்தையொட்டி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6:00 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் புறப்பாடாகியதும் கோயில் நடை சாத்தப்பட்டது. சுவாமி, அம்மன் கோயில் ரதவீதி, வர்த்தகன் தெரு, திட்டகுடியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 12:20 மணிக்கு கோயிலுக்கு சுவாமி, அம்மன் திரும்பியதும் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடந்தது.