ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :3255 days ago
கோவை: இடையர்பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. கோவை, தடாகம் ரோடு, இடையர்பாளையம், தேவாங்க நகரில் ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டும், ஸ்ரீ சபரி அன்னதான சேவா அறக்கட்டளை சார்பில், 11ம் ஆண்டு மண்டல பூஜைகள் மூன்று நாட்கள் நடத்தப்பட்டன. இதில், ஐயப்பனுக்கு மலர் அபிஷேகம், திருவீதி உலா மற்றும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜையை முன்னிட்டு, கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இடையர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.