கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் விழா
ADDED :3256 days ago
கரூர்: கரூர், அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும், 29ல் பகல் பத்து நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. வரும், 7ல் சுவாமிக்கு மோகினி அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, 8 அன்று, காலை, 5:30 மணியளவில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 18ல் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.