சங்கீத மும்மூர்த்திகளுக்கு 3ம் ஆண்டு இசை விழா
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நாதஸ்வர தவிலிசை அகத்தியர் இசைப்பேரவை சார்பில் சங்கீத மும்மூர்த்திகளுக்கு இசைவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, மருத்துவ சமுதாய பேரவையின் மாநில தலைவர் பழனி தலைமை தாங்கினார். அகத்தியர் இசை பேரவை தலைவர் பாண்டுரங்கன், துணைத் தலைவர் கொளஞ்சி, துணைச் செயலர் ரமேஷ், பொருளாளர் கோவிந்தசாமி, துணை பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். செயலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில், சங்கீத மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர், தியாகராஜ சுவாமி, சியாம சாஸ்திரிகளின் உருவப்படத்துடன் 101 நாதஸ்வர தவிலிசை கலைஞர்கள் இசைத்தபடி, ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, மாம்பலம் சிவா, மணிகண்டன், மன்னார்குடி வாசுதேவன், திருக்கடையூர் பாபு ஆகியோரது சிறப்பு நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சி நடந்தது.