வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :3469 days ago
வடமதுரை, வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேக வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் ஐயப்பன் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் ஆர்.கே.பெருமாள், செயலாளர் சண்முகவேல், தலைமை குருநாதர் அழகர்சாமி செய்திருந்தனர்.