புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ தாண்டவ நடனம்
ADDED :3235 days ago
காஞ்சிபுரம்: சிவபெருமான் ஆடிய தாண்டவத்தில் ஒன்றாக கருதப்படும் பிரதோஷ நடனம் நிகழ்ச்சி நேற்று காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. சுவாமி தரிசனத்திற்கு வந்தவர்கள், சிறப்பு நடனத்தை கண்டு ரசித்தனர். சிவபெருமான், நுாற்றுக்கும் மேற்பட்ட தாண்டவம் ஆடியதாக, புராணங்களில் கூறப் படுகிறது. அதில் பிரதோஷ நாளில் ஆடிய நடனத்திற்கு பெயர் பிரதோஷ தாண்டவம். இந்த நடனம், உடுமலை பேட்டையை சேர்ந்த செந்தில் என்பவர், நேற்று சின்ன காஞ்சிபுரம் புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் ஆடினார். இதற்கு முன் காஞ்சிபுரம் மகா பெரியவர் மணிமண்டபம் மற்றும் ஏகாம்பரநாதர் கோவிலில் இவரது பிரதோஷ தாண்டவம் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் நேற்று புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் நடந்தது.