உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா

திருக்கழுக்குன்றத்தில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா

திருக்கழுக்குன்றம்: முத்திகை நல்லாங் குப்பத்தில் உள்ள, மணிகண்ட சாஸ்தா கோவிலின் மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, முத்திகை நல்லாங் குப்பத்தில், மலைக்குன்றின் மீது அமைந்துள்ள மணிகண்ட சாஸ்தா கோவிலின் கும்பாபிஷேகம், நவம்பர் மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அபிஷேகத்திற்காக நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், 48வது மண்டல பூஜை நிறைவு நாளன்று, சுவாமி மணிகண்ட சாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதுடன், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !