சுகவனேஸ்வரர் கோவிலில் குடிநீர் டேங்க் பழுதால் பக்தர்கள் தவிப்பு!
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் தொட்டி பழுது சரி செய்யாததால், பக்தர்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் தினமும் வந்து செல்கின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன், கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் "டேங்க் வைக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன், கோவில் வளாகத்தில் உள்ள குடிநீர் "டேங்க் பழுதடைந்தது. இதனால், பக்தர்கள் குடிநீர் அருந்த வசதியில்லாத நிலை ஏற்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் "டேங்க்கை சீர் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் தத்தளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் "டேங்க்கை உடனடியாக பழுது நீக்கி, சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.