சிவாலயத்தில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
ADDED :3211 days ago
ப.வேலூர்: பொத்தனூர் காசிவிஸ்வநாதர் கோவிலில், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் காசிவிஸ்வநாதர் கோவிலில், நேற்று திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பக்தர்கள் விரதமிருந்து, திருவாசகத்தை சிவனடியார்கள் வாசிக்க, பக்தர்களும் வாசித்தனர். மாலை, 5:00 மணிக்கு மேல், காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதருடன் பஞ்சமூர்த்திகளுக்கு, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின், சுவாமிகளின் திருவீதி உலா பிரதான வீதிகளின் வழியாக, கோவிலை வந்தடைந்தது. பின், தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, அனைத்து சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர். இதில், சிவனடியார்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.