செங்கழுநீர் அம்மன் கும்பாபிஷேக பணிக்கு ரூ.10 லட்சம் வழங்கல்
ADDED :3271 days ago
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் செல்வ விநாயகர் செங்கழுநீர் அம்மன் கோவில் திருகுடமுழுக்கு பணிக்காக, ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அரும்பார்த்தபுரம் செல்வ விநாயகர் செங்கழுநீர் அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இப்பணிக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. சட்டசபை அலுவலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தொகுதி எம்.எல்.ஏ., எம்.என்.ஆர். பாலன் முன்னிலையில் ஆலய குழு தலைவர் முருகசாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், இந்து அறநிலைய துறை இயக்குனர் தில்லைவேல், ஆலய நிர்வாகிகள் பொன்னுசாமி, வேலாயுதம், அன்பு, தேவராசு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.