உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கன்னிமார் கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கன்னிமார் கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பல்லடம்: பல்லடம் அருகே பருவாயில், விநாயகர் கன்னிமார் கருப்பராய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பருவாய், கொசவங்காடு தோட்டத்தில் உள்ள  விநாயகர், கன்னிமார் கருப்பராய சுவாமி மற்றும் சாமியாத்தாள் அறிவுத் திருக்கோவில்கள் கட்டப்பட்டன. இத்திருக்கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. பிப்., 5 காலை, 5.00 மணி முதல் கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, மற்றும் சுவாமி கள் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றன. இரண்டாம் நாளான நேற்று, இரண்டாம் கால யாக பூஜை, காப்பு கட்டுதல், மூலிகை பொருட்கள் வேள்வி உள்ளிட்டவை நடந்தது.  தொடர்ந்து காலை, 9.30 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் விநாயகர், கருப்பராயர், கன்னிமார் சுவாமிகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா, மகா அபிஷேகம் நடைபெற்றது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !