அய்யர்மலை, ஆர்.டி.மலை கோவில் கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்கள்
ADDED :3161 days ago
குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வர் மலைக்கோவில் பவுர்ணமி கிரிவலம் நேற்று மாலை, 5:00 மணியில் இருந்து, பக்தர்கள், நான்கு கி.மீ., மலையை சுற்றி வலம் வந்தனர். சின்னரெட்டியபட்டியில், 300 அடி உயரத்தில், 2.60 கி.மீ., சுற்றளவு கொண்ட பாறையால் ஆன குன்னுடையார் மலை உள்ளது. இந்த மலை உச்சியில், ஆவுடையநாயகி உடனான ஆவுடையலிங்கேஸ்வரர் என்ற கோவில் உள்ளது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடந்து வருகிறது. நேற்றைய பவுர்ணமியில் கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மலை மீது உள்ள கோவிலில் அலங்கரிக்கப்பட்ட ஆவுடைய லிங்கேஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் ஆர்.டி. மலை விராச்சிலேஸ்வரர் மலை கோவில்களிலும் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.