ஓம் ச ர வ ண ப வ எனும் திருமந்திரம்... கந்தசஷ்டி விரதமும் சிறப்பும்!
ADDED :5195 days ago
மு...ரு...கா... : முருகா என்றால் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு நிகர் யாருமில்லை. முருகனுக்கென எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது கந்த சஷ்டி. தீபாவளி தினமான வருகிற 26.10.2011ல் ஆரம்பமாகி 31.10.2011 வரை உள்ள இந்த சஷ்டி நாட்களில் முருகனுக்காக விரதமிருந்து மனமுருகி வழிபட்டால் நமக்கு வேண்டியதை கொடுத்து அருள்வான் முருகன்.