திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா துவக்கம்
ADDED :5132 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுடன் துவங்குகிறது.வழக்கமாக தீபாவளி மறுநாளோ அல்லது அதற்கடுத்த நாளோ சஷ்டி திருவிழா துவங்கும். இந்தாண்டு தீபாவளியன்று துவங்குகிறது. காலை 9.15 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்படும். அதனைத் தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்படும். பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். விழா முக்கிய நிகழ்ச்சியாக அக். 31ல் சூரசம்ஹாரம், நவ., 1 காலையில் சட்டத் தேரோட்டம், மாலையில் பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.