உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதபுரீஸ்வரர் கோவிலில் கதர் கண்காட்சி துவக்கம்

வேதபுரீஸ்வரர் கோவிலில் கதர் கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி : வேதபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி கதர் கண்காட்சி துவங்கியது. புதுச்சேரி கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் சார்பில், மகா சிவராத்திரி கதர் கண்காட்சி துவக்க விழா, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில் தேவஸ்தான திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் ஷாஜகான் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகம், ஆந்திரா, உத்திரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், கேரளா மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கதர் ரகங்கள், பட்டு ரகங்கள், கிராம தொழில் பொருட்கள் புதுச்சேரி அரசின் சிறப்பு தள்ளுபடியுடன் வாங்கலாம். அரசு ஊழியர்களுக்கு 10 மாத தவணையில் கடன் வசதி உண்டு. வரும் 25ம் தேதி வரை நடக்கும் கதர் கண்காட்சியை காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !