ஓசூரில் பகவான் யோகிராம் சுரத்குமார் ஆராதனை விழா
ADDED :3208 days ago
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பகவான் யோகிராம் சுரத்குமார் ஆராதனை விழா நடந்தது. ஓசூர், டி.வி.எஸ்., நகர் எதிரே, ஸ்ரீராம்ஜி காலனியில், பகவான் யோகிராம் சுரத்குமார் பஜனை மந்திர் உள்ளது. இங்கு, நேற்று பகவான் யோகிராம் சுரத்குமார் ஆராதனை விழா, தத்துவஞானி பெருமாள்ராசு தலைமையில் நடந்தது. விழாவையொட்டி அதிகாலை, 5:30 மணிக்கு அபிஷேக பூஜை, 6:00 மணிக்கு அகண்ட நாம ஜெப துவக்கம், 10:00 மணிக்கு ஜெபம் நிறைவு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, ராம்ஜி பஜனை குழு சார்பில், பஜனை நடந்தது. மதியம், 12:15 மணிக்கு, ராஜபாளையம் யோகிராம் சுரத்குமார் பஜனை மடம் தலைவர் சற்குணம் பங்கேற்ற சொற்பொழிவு நடந்தது. ஓசூர் பகவான் யோகிராம் சுரத்குமார் பஜனை மந்திர் ஒருங்கிணைப்பாளர் ரத்தினகுமார், சுவர்ணநாதன், முருகானந்தம், சரவணன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.