திருப்பதி பெருமாளுக்கு தெலுங்கானா முதல்வர் ஐந்தரை கோடி காணிக்கை!
ADDED :3258 days ago
திருப்பதி: தெலுங்கனா தனி மாநிலம் நல்லபடியாக அமைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தங்க ஆரம் மற்றும் கழுத்தில் அணிவிக்கும் ஐந்தடுக்கு மகரகாண்டி என்ற இரு ஆபரணங்களை வழங்க இருக்கிறார்.
வைர, வைடூரியம் பதிப்பிக்கப்பட்ட சுமார் 20 கிலோ எடையுள்ள இந்த ஆபரணங்களின் மதிப்பு ஐந்தரை கோடி ரூபாயாகும். இதற்காக திருமலை வந்து சேர்ந்துள்ள முதல்வர் சந்திரசேகரராவ் புதன்கிழமை(22ம் தேதி) காலை இந்த ஆபரணங்களை திருமலை திருப்பதி நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறார்.