உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டை சிவராத்திரி விரதம்

ஆர்.கே.பேட்டை சிவராத்திரி விரதம்

ஆர்.கே.பேட்டை: சிவராத்திரியையொட்டி, நான்கு கால வழிபாடு மற்றும் சொற்பொழிவு நடைபெற உள்ளன.

பொதட்டூர்பேட்டை, அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், வரும் வெள்ளிக்கிழமை சிவராத்திரி விரதத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, அப்பர் இறைப்பணி மன்றத்தின் தேவாரம் திருப்புகழ் பாமாலை; 7:00 மணிக்கு, திருநாவுக்கரசர் பெருமை என்ற தலைப்பில் சொற்பொழிவு; 9:00 மணிக்கு மகா சிவராத்திரி பெருமை; 10:00 மணிக்கு திருஞானசம்பந்தர் தொண்டு; நள்ளிரவு, 12:00 மணிக்கு, பக்த மார்கண்டேயர் வரலாறு என்ற தலைப்புகளில், சொற்பொழிவு நடக்கிறது.இதனிடையே, நான்கு கால பூஜைகளும், சுவாமி தரிசனமும் தொடர்ந்து நடக்கிறது. விடிய விடிய சிவபராணம் வாசிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.இதேபோல், ஆர்.கே.பேட்டை, மட்டவலம், அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட இடங்களிலும், சிவாலயங்களில் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !