உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதலுடன் கம்பம் நடும் விழா

மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதலுடன் கம்பம் நடும் விழா

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், 24 மனை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு மற்றும் கம்பம் நடும் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, மாரியம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வரும், 28 இரவு, 7:00 மணிக்கு சக்தி அழைப்பு வைபவம், மார்ச், 1 காலை, 6:00 மணியளவில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, 2ல் மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடக்க உள்ளன. விழா நடக்க உள்ள, மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !