பாளை தூய யூதா ததேயு ஆலய திருவிழா கோலாகலம்!
ADDED :5131 days ago
திருநெல்வேலி: பாளை,. தூய யூதா ததேயு ஆலய திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.பாளை., மகாராஜநகர் இபி,. காலனி தூய யூதா ததேயு ஆலயத்தின் திருவிழா கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வழிபாடுகள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கடந்த 23ம்தேதி மதியம் அசன விருந்து நடந்தது.இன்று(28ம்தேதி) நற்கருணை பவனியும், 29ம்தேதி அன்பிய கலைவிழாவும், 30ம்தேதி திருவிழா திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாளை., பகுதியை சேர்ந்த இறைமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜெயபாலன் தலைமையில் திருவழிபாட்டு பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.