மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை
ADDED :3146 days ago
மதுரை: யா. நரசிங்கம் ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பக்குளம் எதிரில் அமைந்துள்ள உடையப்ப செட்டியார் கிரஷர் வளாகத்தில், நேற்று முன் தினம் (26ம்தேதி)நரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமி மூலமந்திர மஹாயாகம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெறுவதற்கு அக்னி வழிபாட்டின் மூலம் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த மகாயாகத்தில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மகாயாகத்தில் வைக்கப்பட்ட பிரசாதம் வேண்டுவோர் ரூ.100/. ரூபாய் மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு: ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட்
மொபைல்:98420 24866, 94882 14267