உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா : 3,136 பேர் பங்கேற்க அனுமதி

கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா : 3,136 பேர் பங்கேற்க அனுமதி

தேனி: கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்திலிருந்து 3,136 பேர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 11ல் நடக்கிறது. இதையொட்டி அரியலுார் 64, சென்னை 317, கடலுார் 292, திண்டுக்கல் 201, ஈரோடு 21, காஞ்சிபுரம் 27, மதுரை நகர் 259, மதுரை புறநகர் 46, தேனி 55, விருதுநகர் 53, உட்பட மாநிலம் முழுவதும் 3,136 பேர் இதில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து படகுகளில் அழைத்து செல்லப்பட்டு, பின் கச்சத்தீவில் இருந்து அதே படகுகளில் மீண்டும் திரும்புவர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !