சக்கரத்தாழ்வார் சன்னிதியில் சுதர்சன யாகம்
ஆர்.கே.பேட்டை: ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்ம பெருமாள் கோவிலில், நேற்று காலை, சுதர்சன யாகம் நடந்தது. ஆர்.கே .பே ட்டை அடுத்த, வங்கனுாரில் உள்ளது அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில். 2015,நவ ., 18ம் தே தி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும், அதே க�ோ வில் வளாகத்தில், புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டசக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மபெருமாள் சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மாவட்டத்தில், வேறு எங்கும் இல்லாதவிதமாக, இந்த சன்னிதியில், ஒரே கல்லில், ஒருபுறம் சக்கரத்தாழ்வார் சிலையும், மறுபுறம் யோக நரசிம்ம பெருமாள் சுவாமியும் அருள்பாலிக்கின்றனர். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், யோக நரசிம்மர் மேற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். சக்கரத்தாழ்வார், 16 கரங்களில்,16 விதமான ஆயுதங்களை ஏந்தியுள்ளார். ஒவ்வொன்றுக்கும் தனிச்சிறப்பு உண்டு. கும்பாபிஷேகம் நடந்து, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, நேற்று,காலை, 10:00 மணிக்கு சுதர்சன யாகம் நடந்தது. 11:00 மணியளவில், உற்சவர் அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி,பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.