உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் திருவிழாவில் எருதாட்டம்

சக்தி மாரியம்மன் திருவிழாவில் எருதாட்டம்

சூரமங்கலம் : அழகாபுரத்தில், திருவிழாவை முன்னிட்டு, எருதாட்டம் களைகட்டியது. சேலம், அழகாபுரம், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 7 முதல், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று மாலை, 5:30 மணியளவில், எருதாட்டம் நடந்தது.அதில், மிட்டாபுதுார், ரெட்டியூர், காட்டூர், அழகாபுரம், சாரதா காலேஜ் பகுதிகளில் இருந்து, வடக்கத்தி, பூர்ணி, நாட்டு, காங்கேயம் உள்பட, பல்வேறு விதமான, 25 காளைகள் பங்கேற்றன. ஏராளமான இளைஞர்கள், காளைகளை அடக்க முயன்று கீழே விழுந்தனர். சிலர், அவற்றை பிடித்த படியும், பலர், கயிற்றை பிடித்தபடியும் ஓடி விளையாடினர். இதை, அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !