பாக்., கில் பாரம்பரிய இந்து கோவில் திறப்பு!
ADDED :5133 days ago
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள பெஷாவர் நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் 160 ஆண்டுகள் பழமையான கோரக்நாத் கோவில், பெஷாவர் கோர்ட்டின் உத்தரவின் படி திறக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், அங்குள்ள இந்துக்கள் புத்தாடைகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர். சிறுவர்கள் வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர். இளைய தலைமுறையினர் பஜனை பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல், அவற்றிற்கேற்ப நடனமாடினர். இந்த கோவிலுக்கு 2 தரப்பினர் உரிமை கொண்டாடியதன் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, இந்த கோவில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.