அம்மனுக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணி துவக்கம்
ADDED :3122 days ago
கொளத்தூர்: மேட்டூர் அணை கரையோரம், காவேரி அம்மனுக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணி துவங்கியுள்ளது. கொளத்தூர் ஒன்றியம், பண்ணவாடியை சேர்ந்த பெரும்பாலான மக்கள், அணையில் மீன்பிடிக்கும் தொழில் செய்கின்றனர். அவர்கள், தங்களை வாழவைக்கும் காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, அணை கரையோரம், சிறு கோவில் கட்டி வழிபாடு செய்தனர். ஆடி மாத பண்டிகை நடத்தினர். இந்நிலையில், காவேரியம்மன் கோவிலை, 25 லட்சம் ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக கட்ட, மீனவர்கள் மற்றும் மக்கள் முடிவு செய்தனர். அதன் கட்டுமான பணி, இரு நாட்களுக்கு முன் துவங்கி நடந்து வருகிறது. அப்பணிக்காக, மீனவர்கள், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களிடம், நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.