உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் ராமநவமி விழா

வேணுகோபால சுவாமி கோவிலில் ராமநவமி விழா

சென்னை: சென்னை, கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், ராமநவமியை ஒட்டி, இன்று முதல், ஏப்., 4 வரை, லட்சார்ச்சனை நடக்கிறது. இன்று, தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி, இக்கோவிலில், மாலையில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், ஏப்., 4ம் தேதி, ராமநவமி அன்று மாலை, சீதா கல்யாணம் - சம்பிரதாய பஜனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அப்போது, சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடக்கும். லட்சார்ச்சனையில் பங்கு பெற விரும்புவோர், கோவிலில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !